

Dharisanam

வரலாறு
மேற்கத்தி அம்மன்
கார்த்தி வித்யாலயா மேல்நிலை பள்ளி வளாகத்தில் காலை திடிரென்று கோவிலுக்குள் பசு மாடு ஒன்று சென்றது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் ஆச்சரியப்பட்டு மாடு என்ன செய்கிறது என பார்த்தனர்.
திடிரென்று சுயம்பு மூர்த்தி அருகே சென்ற பசு , தானாகவே பால் சுரந்தது. இயற்கையாக அபிஷேயகம் நடந்ததை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்து ஓம் சக்தி , மகா சக்தி என கோஷமிட்டனர் .
இருப்பினும் அங்கேயே 10 நிமிடம் இருந்த பசு பின்னர் வந்த வழியே சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

அமைந்துஇருக்கும் இடம்
மேற்கத்தி அம்மன்
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மேல்நிலை பள்ளி வளாகத்தில் மேற்கத்தி அம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் அம்பாள் நின்ற கோலத்தில் மூலவராகவும் , கீழே தனியாக சுயம்பு மூர்த்தியாகவும் அருள் பாலிக்கிறார்.
